5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெசி ஜெகசீலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரே எங்கள் உயிர் ஓவியமே!
அலையும் அடித்து ஓய்ந்ததம்மா
காற்றும் வீச மறந்ததம்மா
கடவுளும் கருணையின்றிப் போனானே..
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே
மதுரமாய் பகிர்ந்த மழலை பேச்சுகள் எங்கே
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே
இன்றெமைக் கலங்க விட்டதேனோ...
என் செய்வோம் எம் செல்லமே!
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது...
இதயத்தில் நிறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களின் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை
உன்னை நினைத்திருப்போம் எம் செல்வமே..!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.