4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெசி ஜெகசீலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம் வியந்த
எம் திருமகளே ஏனோ?
நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும்- உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின் நிலையை யார் தான்
அறிவார் மகளே?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதம்மா!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால் தீராது சோகமப்பா!!!
மகளே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்
எம் குழந்தாய்!
ஈரவிழிகளுடன் நீங்காத நினைவுடன்
வாழும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.