இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெசி ஜெகசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து நீண்ட தூரம் சென்றனையோ!
ஆண்டிரண்டு கடந்த பின்னும்
ஓயவில்லை நினைவலைகள்
அல்லி மலர் முகமும் முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை எம் நினைவில்
மழலைப் பேச்சோடு குறும்புத் தனமும் செய்து
சிட்டுக்குருவியாய் எமை வட்டமிட்ட நாட்கள்
எப்படி மறப்போம்!
அன்பின் திருவுருவே! அறிவின் பொக்கிசமே
அடக்கத்தின் தமிழ் மகளே தேம்பி அழுகின்றோம்
தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள் சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே அறிந்திலனோ எங்கள் நிலை
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்
எனினும் பேதை மனம்…..
நீ வாழ்ந்த உலகம் இன்று உனக்காக தவிக்கிறது
உனது வரவை எண்ணி ஏக்கமுடன் காத்திருக்கு
ஒருமுறை வாராயோ உன் திருமுகம் காட்டாயோ
அழுத விழிகளுக்கு ஆறுதல் தாராயோ.
Rest in peace.