முல்லைத்தீவு மாங்குளம் தச்சடம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Kehrsatz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜனந்திரன் தங்கராசா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
என்னவனே எனக்காகப் பிறந்தவனே உன்
கன்னக்குளிச் சிரிப்பும் கள்ளமற்ற பேச்சும்
சின்னக் குழந்தையாய் சுற்றும் மனதும்
மன்னவனாய் மற்றவர்க்கு கொடுத்துதவும் குணமும் கண்டு
உன் வசப்பட்டுக் காதல் கொண்டேனடா
உன்குரல் கேட்டும் உன்முகம் பார்த்தும்
கண் விழித்தேனடா காலையில் தினமும்
என்மனம் ஏங்குதடா உன்முகம் தேடி இன்று
உன்னையே உலகமென சுற்றி வந்த என்னை
ஏதும் தெரியாத இந்நாட்டில் என்னை
தனியே ஏன் விட்டுச் சென்றாய்
இறக்கும் தருணத்திலும் என்னை எண்ணி
கொண்ட காதலால் தவித்தாயோ என் செய்வேனென்று
உன்னைக் காப்பாற்றத் தவறிய பாவியாய்
உள்ளம் உடைந்து கலங்கி நிற்கிறேனடா
உந்தன் நினைவுகள் கொல்லுதடா என்னை
செல்லும் இடமெல்லாம் உந்தன் முகமடா
உன் கரங்கள் எனைத் தீண்ட வராதோ எனத் தவிக்கிறேனடா
மௌனம் பேசியதோ உன் வார்த்தைகள் எல்லாம்
ஆசை முத்தங்கள் மீண்டும் கிடைக்காதோ
மனைவி என்ற பதவியை மட்டுமே தந்தாயோ
கனா கண்ட வாழ்வினை வாழ ஓடிவா
மீண்டும் வந்தென் மடிமேல் தலைசாய்
வாழ்வோம் ஒன்றாய் வந்துவிடு எனக்காய்
இறுதி மூச்சுவரை உன் நினைவுடனே வாழ்ந்து கழிப்பேனடா
என்னுயிரே என்னவனே
மறுஜென்மம் இருந்திட்டால் உனக்காகக் காத்திருப்பேன்
வந்துவிடு அங்காவது வாழ்ந்திடுவோம் இன்பமாய்
உன் காதல் மனைவி ஷாலு....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest in peace brother