Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JAN 1992
இறப்பு 26 FEB 2022
அமரர் ஜனந்திரன் தங்கராசா
வயது 30
அமரர் ஜனந்திரன் தங்கராசா 1992 - 2022 மாங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு மாங்குளம் தச்சடம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Kehrsatz ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனந்திரன் தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எனை உயிர் பிரிந்து வருடம் ஆகிறது
இறப்பில் நிம்மதி தேடி நீ சென்றுவிட்டாய்
நிர்கதியாய் நிற்கும் என் நிலை அறிவார் உண்டோ...?
யார் அறிய போகிறார்கள் இந்த உலகில் ?

என்னை சூழும் உறவுகள் பாசத்தை காட்டினாலும்
அன்னையின் கைசூடில் முகம் புதைக்கும் பிள்ளையாய்
என் மனம் உன்னை தேடுதடா !!
மீண்டும் வருவாயா என்று
நம் காதல் ஏங்குதடா

கணப்பொழுதில் ஆயிரம் முறை என் பெயரை
முணு முனுக்கும் உனக்கு
இன்று என் குரல் கேட்கலையோ ...
இறக்கும் வலியை விட நினைவுகளின் ரணங்களுக்கு
வலி அதிகம் என்று உணரவைத்தாயே
நீ தந்த வலிகளை தான் நாளும் சுமக்கிறேன்...
உன் நினைவில் தான் நானும் வீழ்கிறேன்.

என்னுடன் நீ நிழலாய் இருப்பதை உணர்கிறேன்.
ஆனாலும் அதை தொட முடியா நிலை ஏனோ
ஈருடலில் ஓன்று மட்டும் தான் என்னை விட்டு சென்றதடா
ஆனால் உன் நினைவுகள் அழியா காவியமாய் என்னுள்

அத்தணை திறமை இருந்தும் ஏன்
உன்னை நீ நம்பவில்லை
நம்மால் முடியும் போராடுவோம் என்றேனே
அதையும் நீ கேட்கவில்லை

எனை சிந்தித்து ஒரு நிமிடம் பொறுத்து இருக்களாமே
இன்று நம் கனவுகள் நம் வசமாகி இருக்குமே
நாம் ஒன்றாக எதையும் தாங்கி இருக்கலாமே சேர்ந்து வாழ
அதை செய்து காட்ட தவறியது ஏன் ??

யாருக்கும் தீங்கு நினைக்காத உனக்கு
ஏன் இந்த நிலை
நம்மேல் அந்த காலணுக்கும் மனவெரிச்சல்
போல் அழைத்து விட்டான் உன்னை
பிரித்து விட்டான் நம்மை - எத்தனை நாட்களுக்கு ??

இந்த வெறுமையிலும் போராடுகிறேன் என் வெற்றிக்காக இல்லை
உன் பெயர் சொல்வதற்க்காக
மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டுகிறேன்.
மீண்டும் சந்தித்து,
மீண்டும் காதலித்து
மீண்டும் மரணிக்க இம்முறை உனக்கு முன் நான் ..

அன்பு மனைவி பிரஷாளினி(ஷாலு)


வருடம் ஒன்று ஓடி மறைந்தாலும்
உன் நினைவுகள் என் மனதில் அழியா
சுவடாய் பொதிந்துள்ளது!
காலை கண் விழித்த நொடி முதல்
உன் ஞாபங்கள் !
சிறு வயதில் நீ செய்யும் சேட்டைகள்,
நாம் அடித்தலுட்டிகள், ஒன்றாக கதை
பேசிய தருணங்கள், பலமுறை உன்னுடன் நான் சண்டை போட்ட
அந்த அழகிய பொக்கிஷமான நாட்களை மீண்டும் மீட்க
திரும்பி என்னிடம் வாடா!!!

அன்பு தங்கை ஐனந்திகா


அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 16-02-2023 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் தச்சடம்பன் மாங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மற்றும் சுவிஸ் Olten மனோன்மணி அம்பாள்(Miesenweg 13 4632 Trimbach Swiss) ஆலயத்தில் 16-02-2023 வியாழக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தங்கராசா - தந்தை
நிசாந்தன் - மைத்துனர்
கேதீஸ்வரன் - மைத்துனர்
பத்மநாதன் செந்தில்செல்வன் - மைத்துனர்
கேசவன் - சகோதரன்

Photos