யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புகாட்டி எம்மை ஆதரித்து
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டு இன்று
ஆண்டு மூன்று ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து திரிந்து
இடமெங்கும் அப்பா உங்கள்
திருமுகம் தோன்றுதிங்கே!
நாம் இந்த மண்ணில் வாழும்வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும் உங்கள்
நினைவுகளை மறக்கத்தான் முடியவில்லை
மாதங்கள் பட்டென்று போனதென்ன
பாசமாயிருந்து எம்மையெல்லாம்
பரிதவிக்க விட்டு நீங்கள் மட்டும்
வானகம் சென்றதென்ன- அப்பா
எங்களோடு தான் இருக்கின்றீர்கள்- ஆனால்
உருவத்தைக் காணவில்லை
மங்காத ஒளிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள்
எம் உள்ளத்தில் என்றும் அப்பாவாய்!
வாழ்ந்தால் உங்களைப்போல் மாமனிதாராய்
வாழவேண்டும் மங்காமல் உங்கள் பெயரை
நினைவில் வைத்திருப்போம் அப்பா !!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
Deepest sympathies. Our sincere condolences.