யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் உருண்டோடி
ஓராண்டை கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லை
உம் நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குதில்லை
உம் ஒளிமுகம் தோன்றுவதால்
ஆயிரம் உறவுகள் வந்து
ஆறுதல் கூறினாலும்
எம் அருகில் நீங்கள்
இன்று இல்லையே
நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
உம் நினைவுகளை
நெஞ்சம் மறக்குதில்லை
எம் குடும்பத்திற்கு நல்ல தலைவனாய்
எம் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய்,
உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
நல்ல வழிகாட்டியாய்
எமக்கெலாம் கலங்கரை
விளக்காய் இருந்தீரே
இன்று காலனதை அணைத்ததேனோ!
அன்னாரின் மறைவுச் செய்திக்கேட்டு ஓடோடி வந்து துயர் பகிர்து ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் மற்றும் இறுதிக்கிரியையில் கலந்துக்கொண்டு இரங்கல் பாடல்கள் இசைத்து, மலர்வளையம் வைத்து, மலர்தூவி, அஞ்சலித்து, தேனீர், குளிர்பாணங்கள், உணவு என மேலும் பல உதவிகள் புரிந்தோருக்கும் மற்றும் நினைவு மலர் வெளியிட்டு உதவியோருக்கும், அந்தியேட்டியில் கலந்துக்கொண்டு ஆத்மா சாந்திக்காய் பிரார்தித்து இன்றுவரை எம்மோடு இருந்து எம் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் எங்கள் நன்றிகளைக் கூறுவதோடு. எங்கள் இதய தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Our heartfelt condolences