யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் டாக்டர் சுப்ரமணியம் வீதியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராதேவி நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
கற்றுத்தந்ததை நினைத்துப் பார்க்கவா?
பற்று வைத்ததைப் பகிர்ந்து கொள்ளவா?
சுற்றுத் தருணங்கள் தந்ததை நினைக்கவா?
இற்றுவிடா வாழ்வு தந்ததை வியக்கவா? நீங்கள்
அற்றுப் போய் விட்டதை எண்ணிக் கலங்கவா?
ஓராண்டு காலம் உருண்டோடி விட்டாலும்
பல்லாண்டுப் பொக்கிஷங்கள் பதித்தே உள்ளதம்மா?
எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்
நீங்கள் இல்லாத வாழ்க்கைப் புத்தகம்
இலக்கண இலக்கியம் தடுமாறிய கவிதைப் புத்தகம் தான்
எம் வாழ்க்கைப் புத்தகப் பக்கங்களிலே....
எங்கள் அத்தியாயங்கள் சுவைமிகுந்தவை என்றால்
உங்கள் அத்தியாயங்கள் தரம் மிகுந்தவை அம்மா
வாசகன் அத்தியாயம் கிழிந்திருப்பான் எனில்
யாசகமாய் கேட்டு வாங்கியிருப்போம்
பறித்துக் கிழித்தவன் பாதகன் காலன் அல்லவா?
என் செய்வொம் நாமெல்லாம்? பரவாயில்லை
உள்வாங்கிய விடயங்கள் எம்மனச் சுவர் ஓவியங்கள்
பறிக்க முடியாது பத்திரமாய் பாதுகாப்போம்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Heartfelt condolences to Jeganathan and her sisters family