யாழ். திருநெல்வேலி பணிக்கர்வளவு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை வின்சர் அவனியூவை வதிவிடமாகவும் கொண்ட இளையப்பு கார்த்திகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் இளையப்பு கார்த்திகேசு அவர்களது அந்தியேட்டிகிரியை 08-03-2025 சனிக்கிழமை காலை 06.00 மணியளவில் முகத்துவாரம் அந்தியேட்டி மண்டபத்திலும், வீட்டுக்கிருத்தியம் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும்.
Heartfelt condolences from Gnanatharan family. Wish you peace and strength during these difficult times.