அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 28-01-2026 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
யாழ். திருநெல்வேலி பணிக்கர்வளவு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை வின்சர் அவனியூவை வதிவிடமாகவும் கொண்ட இளையப்பு கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப் போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும்.
நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதவை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை.
கண்ணை மூடி நாங்கள் நித்திரை
கொண்டாலும் உங்கள் அன்பான முகம்
தான் வந்து வந்து போகிறது.
உங்கள் புன்னகை பூத்த அழகு
முகம் மறைந்தது என்று எங்களால்
ஏற்க முடியவில்லை அப்பா!
உங்களை கான உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Heartfelt condolences from Gnanatharan family. Wish you peace and strength during these difficult times.