

அமரர் இளையதம்பி சண்முகநாதன்
பிறப்பு : 20-07-1941 இறப்பு : 21-03-2020
திதி: 22-05-2025
யாழ். சுன்னாகம் மேற்கு கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சண்முகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்காக வாழ்ந்து எங்களை
வாழ வைத்த தெய்வமே!
தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது”
எனக்கருதி உங்கள் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்திற்காகவும் எமது
முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவரே!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள் இதயத்திலேயே வாழ்கிறீர்கள் ஐயா!
உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
-----------------------------------------------------------------
அமரர் யோகராணி சண்முகநாதன்
பிறப்பு: 23-01-1945 இறப்பு : 01-02-2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கை வாழ்விடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா வேல்ஸ்(Wales), கார்டிஃவ் (Cardiff) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகராணி சண்முகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற ஐந்து முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...