யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்த்திகழந்த இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து இல்லத்திற்கு வருகைதந்து ஆறுதல் கூறிய உறவினர்கள், நண்பர்கள், கனடா, தாயகம் மற்றும் அனைத்து நாடுகளிலும் இருந்து தொலைபேசி மூலம் ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்தும் பகிர்ந்தும் மிகக்குறுகிய காலத்தில் அனைவருக்கும் இச்செய்தியை அறியப்படுத்திய நண்பர்கள், பத்திரிகையாளர்கள், வானொலி ஊடகவியளாலர்கள் தொலைக்காட்சி அன்பர்கள், இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்த மொன்ரமிழ், லங்காஸ்ரீ நிறுவனர்கள் மற்றும் கொரோனா என்னும் கொடிய நோய் தாக்கம் காரணமாக எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய கால கட்டத்திலும் அன்னையின் ஆத்மா சாந்தி வேண்டி நேரில் வந்து இறுதி கிரியைகளை சிறப்புற நடாத்தித் தந்த அந்தணர் பெருந்தகை அவர்களுக்கும், ஜெப பிரார்தனை சிறப்புற நடாத்தி தந்த அருட்தந்தையர்கள் இருவருக்கும் மற்றும் இறுதிச் சடங்கு நேரத்தில் பத்துப்பேர் மட்டுமே மண்டபத்தில் நிற்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்தும் எமது குடும்பத்தின் மேல் கொண்ட அன்பினாலும், அக்கறையினாலும் சிரமத்தைப் பொருட்படுத்தாது வரிசையில் நின்று இருவர் இருவராக மண்டபத்திற்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியதோடு அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்த அன்பான உள்ளங்களுக்கும் இன்னும் பல வழிகளிலும் எம்மோடு தோளோடு தோள் நின்று எம் துயரில் பங்குகொண்ட அனைத்து அன்பு உறவுகளுக்கும் எம் சிரம்மேல் கரம் கூப்பி நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
My deepest sympathies go out to you and your family. RIP