![](https://cdn.lankasririp.com/memorial/notice/200415/6dca6d35-dd21-4fc6-b5fe-c635780a4f4e/22-6218a77c479e5.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/200415/fb04b565-1ff1-45ba-ab6f-b948076f8db2/21-606fe75bbed26-md.webp)
யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மா எங்கள் தெய்வமே
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
கண்ணீர் சிந்த விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ..?
அம்மாவாய் எம்மை அரவணைத்து
தந்தையாய் எம்மை கண்டித்து
ஆசானாய் எமக்கு பாடம் புகட்டி
தெய்வமாய் எம்மை காத்து நின்ற
எங்கள் கோயிலே- இறைவனடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆனதோ..?
பார்க்குமிடமெல்லாம் உங்கள் பொருட்கள்
கூப்பிடுவது போல ஒரு பிரம்மை
போகுமிடமெல்லாம் நிழலாய் பின் வந்த- நீங்கள்
இப்போது எங்கே அம்மம்மா..?
நிஜம் தேடும் உங்கள் அன்பை
நம் பெற்றவரும், உடன்பிறந்தவரும் மற்றவரும்
போற்றி புகழ்தல் கண்டு- மனம்
வெதும்பி நிற்கின்றோம் பாட்டி..
ஆண்டு ஒன்றல்ல ஆயிரம் ஆனாலும்
உங்கள்அன்பையும் உங்கள் நற்பண்புகளையும்
எம் உயிர் உள்ள வரை நெஞ்சோடு சுமந்திருப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
My deepest sympathies go out to you and your family. RIP