

யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காமல்
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நாங்கள் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!!!
நீங்கள் பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
எங்களை கலங்க விட்டதேனோ...!
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும்
அம்மம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
வீட்டிற்கு வருபவரை
அன்புடன் வரவேற்று
அன்னபூரணி போல் உணவளிக்கும்
எங்கள் வீட்டு தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!