5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காந்தசீலன் சண்முகநாதன்
வயது 29

அமரர் காந்தசீலன் சண்முகநாதன்
1989 -
2019
Moenchengladbach, Germany
Germany
Tribute
38
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்தசீலன் சண்முகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
உந்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும்
மறையவில்லை!
நீங்கள் விண்மீனாய் தொலைதூரம் போனதேனோ?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
உந்தன் அன்புக்கு ஈடாகுமோ...
புன்னகை புரியும் உங்கள் முகம் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கிறோம்
தன்னந்தனியே தனித்திருந்த நீங்கள்
தவியாய் நாம் தவித்திடவே எமை மறந்து
மண்ணை விட்டு மாயமாகி
விண்ணுலகம் சென்றது ஏன் தானோ
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்