ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்தசீலன் சண்முகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறவாத பூமி அன்று ஒளி இழந்தது - எங்கள்
இதயத்தில் ஒளிர்ந்த சுடர் திரி மறந்தது
சீலன் உருவம் இருவருடம் என்ன ஆனது - அவன்
சிந்தனையில் அநுதினமும் மனம் பதறுது!
ஆறுதலே இல்லாமல் கதறி அழுகிறோம் -
கொஞ்சம் அரவணைத்து முத்தமிட நீ அருகில் இல்லையே!
காலக் குவளையினில் கரையாத அற்புதனே
காலைப்பனி போன்ற புன்னகையின் உறவினனே எல்லாம்
எமக்களித்து போதுமென்று சென்றவனே - நீ இல்லா
புவி எமக்கு கண்ணீரின் சாகரமே!
ஆறுதலே இல்லாமல்கதறி அழுகிறோம் - கொஞ்சம்
அரவணைத்து முத்தமிட நீ அருகில் இல்லையே!
ஒற்றைத்திரி விளக்காய் ஒளி விளம்பினாய் - எங்கள்
ஓலங்களை கேட்டும் அன்று ஆழ்ந்து தூங்கினாய்
புன்னகையை மறவாத முகம் தாங்குவாய் - அன்று
புதிரான முகத்தோடு குழியில் உறங்கினாய்!
ஆறுதலே இல்லாமல்கதறி அழுகிறோம் - கொஞ்சம்
அரவணைத்து முத்தமிட நீ அருகில் இல்லையே!
நாட்கள் வருடங்களாய் தாவி ஓடினும் - நினைவில்
பூக்கள் மலர்ந்து உன்னை நினைவு கூறினும்
இன்றுவரை உனை அழைத்த சாவை மறுக்கிறோம் - நீ
எங்களுடன் வாழ்வதாக நினைவு நிறைக்கிறோம்!!
ஆறுதலே இல்லாமல்கதறி அழுகிறோம் - கொஞ்சம்
அரவணைத்து முத்தமிட நீ அருகில் இல்லையே!
அன்புடன் அம்மா, அப்பா மற்றும் சகோதரர்கள் !!!
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!