Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1997
இறப்பு 25 MAR 2020
அமரர் குணசேகரன் ஜெசீனா
வயது 22
அமரர் குணசேகரன் ஜெசீனா 1997 - 2020 சொலோதென், Switzerland Switzerland
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணசேகரன் ஜெசீனா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.   

காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு ஆறு
வந்தும் ஆறமுடியவில்லை ஜெசீனா..!

அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம் ஜெசீனா!

கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

அன்பு மழலை மொழி பேசி
அனைவரையும் கவர்ந்த அழகு முகம்
கானாது நாங்கள் அழுவது
உன் காதில் கேட்கிறதா மகளே- நீ
எத்தனை பிறப்புகள் எடுத்தாலும்
அத்தனை பிறப்புக்களும் எங்களுடைய
பிள்ளையாக நீ வர வேண்டும்.
எம் குடும்ப விளக்காய் நீ பிரகாசிக்க
ஏங்குகிறோம்.

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
 ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும் அன்பு மகளே!!!!
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
 இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்..!

என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices