2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே ஜெசீனா...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரிகிறது செல்லமே!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால் தீராது சோகமம்மா!!!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்