
சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆருயிர் செல்லமே ஜெசீனா!
உன்னை காணாமல் ஒரு வருடமாக தேடுகின்றேன்
நீ போன இடம் தெரியாமல் தவிக்கின்றேன் ஜெசீனா!
உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய காரணம்
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லைஇறைவனின் விதி விளையாட்டோ?
நான் அறியேன் ஜெசீனா! ஜெசீனா! ஜெசீனா!
உன் பிரிவால் வலிகள் தந்தவளே!
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
உன் புன்னகை காணாது தவிக்கிறேன் ஜெசீனா!
தூக்கம் கெடும்போதெல்லாம்
கொல்கிறது உன் நினைவு!
தூங்கி எழும்போதும் கனக்கிறது என் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதோ!
ஜெசீனா! ஜெசீனா!
ஒரு வருடம் ஆனாலும் அம்மா ஆறாது
உனது பிரிவுத்துயர் நாம் புலம்புகின்றோம்!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
மகிழ்வித்த அந்த நாட்கள் எம் நினைவில்
என்றும் இனிக்கின்றதே அம்மா!
உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
ஜெசீனா! ஜெசீனா!
எங்கள் குடும்ப ஒளிவிளக்கே உங்கள்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்!