31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 23 MAR 1959
ஆண்டவன் அடியில் 14 JUL 2022
திருமதி குணரத்தினம் கமலராணி
வயது 63
திருமதி குணரத்தினம் கமலராணி 1959 - 2022 துணுக்காய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். துணுக்காயைப் பிறப்பிடமாகவும், புத்தூர் நவற்கிரி, சுவிஸ் Bern Rubigen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் கமலராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை
எம்மை விட்டு எங்கு சென்றாய்
இழந்த துயர் ஈடுசெய்ய முடியாமல்
தவியாய் தவிக்கின்றோம்.

எமது குடும்பத்தின் பாசத்தலைவியாய்
திகழ்ந்த எங்கள் அன்புத்தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் அள்ளிதந்து
எங்களை தவிக்கவிட்டு
விண்ணுலகு சென்றீரோ!

ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 13-08-2022 சனிக்கிழமை அன்று பேர்ண் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதிய போசனமும் இடம் பெறும் என்பதையும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பான வேண்டுகோள் எல்லோரிடமும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை தவறவிடப்பட்டவர்கள் அன்பு கூர்ந்து இதை நேரடி அறிவிப்பாக ஏற்றுக்கொளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

இங்ஙனம், குணரத்தினமும் குடும்பத்தினரும்
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.