Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 23 MAR 1959
ஆண்டவன் அடியில் 14 JUL 2022
அமரர் குணரத்தினம் கமலராணி 1959 - 2022 துணுக்காய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 11/07/2025

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், புத்தூர், நவற்கிரி, சுவிஸ் Bern Rubigen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் கமலராணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் பிறவி எடுத்தாலும்
 உன் துயர் மனதை விட்டு நீங்காது
 ஈருயிர் ஓருயிராக
இணைந்து வாழ்ந்தோம்...

தனியனாய் தவித்தின்று எப்பிறவியில்
உனை நான் இனி காண்பேன்
என எண்ணி ஏங்குகின்றேன்...

அன்பு பண்பு பாசத்தோடு
நல்ல மனைவியாய் வாழ்ந்த வாழ்கையை
 எண்ணி மனம் மாய்ந்து துன்பத்தில்
 துவண்டு துவள்கிறேன்...

அம்மா !! உன் பிள்ளைகளாக பிறந்தநாள்
 முதலாக உன் பாசமுகம் பார்த்திருந்தோம்
 எம் ஆசை அம்மாவே உன்னோடு எம்
வாழ்நாள் முழவதும் இணைந்து
 வாழ்வோமென மகிழ்ந்திருந்தோம்...

பாவி எங்கள் பாசவலையறுத்து
பாதியிலே பிரிந்து விட்டாயென
 உருகி உள்ளம் வெதும்பியே
 கதறுகின்றோம் தாயே...

வையத்தில் நீ வாழ்ந்தபோது
 வாழ்வெமக்கு வசந்தமாய் ஆனது!
வானுறையும் தெய்வத்துள் கலந்தபோது
வாழ்வே எமக்கு கசந்து விட்டது!
தரணியில் உனக்கு இணையாருமில்லை
 தவிக்கின்றோம் உன் பாசம் பரிவு ஏதுமின்றி...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்