Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 AUG 1976
இறப்பு 05 JUN 2023
அமரர் கோபிகிருஷ்ணா சிவராசா
வயது 46
அமரர் கோபிகிருஷ்ணா சிவராசா 1976 - 2023 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபிகிருஷ்ணா சிவராசா ​அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பு அப்பாவே !
வாசலிலே நின்று எம்மை அன்புடனே வரவழைத்து,
எங்கள் அன்புத்தந்தையே இன்று
வெற்றிடமான வாசலையும் தனி மரமான
என் அம்மாவையும் பனித்த கண்களோடு
எம்மைப் பார்க்க வைத்ததும் ஏனோ?
உறவுகள் என்று ஆயிரம் இருந்தாலும் அப்பா
என்றழைக்க ஓர் உறவு மட்டுமே.
பாதி வயதில் பாதி வழியில் எம்மை பரிதவிக்க
விட்டுப் போவீர்கள் என்று சிறிதளவேனும்
நினைக்கவில்லை அப்பா.
வீசும் தென்றலிலே உங்களைத் தேடுகின்றோம்.
ஒரு வார்த்தை கேட்பதற்கு இறுதியாக
உங்களைக் கண்ட நிமிடங்களை எங்களால்
மறக்க முடியவில்லை அப்பா.
நீங்கள் எங்களை விட்டு சென்று மாதம் ஒன்று
ஆனாலும் எங்கள் இதயத்தில் என்றும்
வாழ்வீர்கள் அப்பா.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.

அன்னாரின் பிரிவை அறிந்து ஆறுதல்கூறி துக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் பிரிவால் துயருறும் குடும்ப உறவுகள்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீட்டுக் கிரியை 05-07-2023 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-07-2023 சனிக்கிழமை அன்று 12:00 மணிமுதல் 03:30 மணிவரை North Harrow Home Guard Club Cambridge Road Car Park Off Pinner Road North Harrow HA2 7TA, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகரன் - சகோதரன்
பாபு - மைத்துனர்
டெனிசன் - சகலன்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.