1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா ஞானேந்திரா
வயது 70
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலையை வசிப்பிடமாகவும், நோர்வே Florø, பிரித்தானியா Enfield ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஞானேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே !
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோமே!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலுமே!
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு!!
பிரிவால் வாடும் மனைவி மக்கள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள் !
தகவல்:
குடும்பத்தினர்