4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசிறி இனிஷா
(விஜி)
வயது 36
Tribute
34
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசிறி இனிஷா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:28/01/2024.
விழிகள் இரண்டும் சொரிந்தநீர்
இன்னும் வற்றவில்லை அம்மா
கண்ணீரின் உப்பு கரிப்பு மாறவில்லை
ஆனால் ஆண்டுகள் கடந்து விட்டது அம்மா
எட்டுத் திசைகளிலும் தேடுகின்றோம்
எமை ஆறுதல்படுத்த யாருமில்லை அம்மா
துன்பங்கள் துயரங்களில் சோர்ந்து வந்து
தலைசாய உன் மடியில்லையே அம்மா
மண்ணாக நீங்கள் விதையாக புதைந்து
எங்களை மரமாக்கி தோப்பாக்கினீர்களே அம்மா
திரும்பும் திசையெல்லாம் உன்முகம் பேசும் ஒவ்வொரு
வார்த்தையிலும் உங்கள் குரல் கேட்கிறதே அம்மா
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்