1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசிறி இனிஷா
(விஜி)
வயது 36
Tribute
36
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசிறி இனிஷா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்