Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 24 MAY 1960
மறைவு 06 OCT 2022
அமரர் ஞானசேகரம் பேரின்பவதி
வயது 62
அமரர் ஞானசேகரம் பேரின்பவதி 1960 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பேரின்பவதி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், பதாகைகள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 03-11-2022 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் சாட்டி வெள்ளைக் கடற்கரையிலும், அதனைத்தொடர்ந்து வீட்டுக்கிருத்திய கிரியை 05-11-2022 சனிக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.