3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:04/10/2025
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் பேரின்பவதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இறையடி நீ சென்று ஆண்டுகள் மூன்றாச்சு
அணையாத நினைவுகளை நெஞ்சில் சுமந்தவராய்
உங்கள் நினைவோடு வாழ்கின்றோம்!
பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய அன்னையே!
உங்கள் முகம் கண்டு ஆண்டு மூன்று ஆனதோ அம்மா...!
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து பெருவாழ்வு எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு ஆண்டு மூன்று ஆனதோ அம்மா...!
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
condolence