யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றதீஸ்வரன் ஞானசேகரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-02-2022
மூச்சுபோய் ஐந்தாண்டுகள்
ஆனதா-ஐயா?
இல்லை உன் முத்து சிரிப்பு
தொலைந்து
போனதா?
ஆண்டுகள் அழிந்தாலும்
அழியாது உம்
நினைவுகள்...
ஆழ்கடல் வற்றினாலும்
எங்கள் அன்புக்கடல்
வற்றாது
எங்கள் அன்புத்தெய்வமே!
நீ இல்லாத உலகில்
எங்கள்
வாழ்வே இருண்டதையா!
கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்துவிட்டீர் காற்றில்!!
இந்த மண்ணில் உம்மைப்போல்
யார்
வருவாரோ?
அப்பாவின் அன்பைவிட சிறந்தது
இந்த உலகில் எதுவும் இல்லை...
அப்பாவை பிரிந்த வலியை
இப்போதுதான் உணருகின்றோம்...
எங்கள் வாழ்க்கைக்கு வழிநின்று
எங்களை எப்போதும் வழிநடத்த வேண்டும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் திதி பூஜை 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காசி, கஜா, அலகாபாத் மற்றும் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIP I think I met you at the Highgate temple once. Can't believe it. Can any of the family member contact me please? 00447969974125