யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றதீஸ்வரன் ஞானசேகரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் பிரிந்து நான்கு ஆண்டு கடக்குதையா...
இன்பங்கள் இரட்டிப்பாகும் துனையாய் நீங்கள்
இருந்த போது இன்று துன்பமே எனக்கு
துனையாய் போனது சொல்ல முடியாத் துயரங்கள்
வாழ்க்கைப் பாதையை சுமந்து கொண்டு நகர்கின்றோம்...
நல்ல துனை என நினைத்தேன் நடுவில் விட்டு போனீர்கள்
மகிழ்வாய் வாழ்ந்தோம் மனமான வாழ்வு போதுமென நீங்கள்
நினைத்துவிட்டீர்களா? இந்த உலகத்தை விட்டு சென்றதை
எம் மனம் நினைக்க மறுக்கின்றது...
ஏதோ உருவத்தில் எங்களோடு இருப்பது போல்
உணர்வு மண்ணுலகை விட்டு விண்ணுலக வாழ்வை
வாழ்ந்திட சென்றீர்கள் ஆனாலும் உங்களுக்கு
இத்தனை அவசரமா? எமக்காய் வாழ்ந்த வாழ்க்கை
பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்றோம்
இறைவன் அழைப்பிற்கு இணைந்து சென்றுவிட்டீர்கள்
இல்லமது இருட்டானது இதை நீங்கள் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள்... பிள்ளைகளின் எதிர் காலத்தை
சிந்தித்து வாழ்ந்தீர் அவர்களையும் உம் பாதையில் நடத்தி
அவர்கள் உச்சத்தை அடைய ஊக்கம் அளிக்க என்னை ஊக்குவித்தீர்.
கலங்காதேயும் நீர் எம் நால்வருடனும் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்.
மகனை பார்த்து குட்டி றதீஸ் என்று அழைக்கும் போது
எம்மை பிரியவில்லை மகன் உருவத்தில்
எங்களுடன் தான் இருக்கின்றீர் என்று நினைக்கின்றோம்.
நாங்கள் நன்றாய் வாழ்ந்திட துணையாய் இருப்பீர்கள் என்ற
நம்பிக்கையோடு நாம் வாழ்கின்றோம்
இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் எம்மை
வழிநடத்த வேண்டும்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிராத்திக்கிறோம்........
RIP I think I met you at the Highgate temple once. Can't believe it. Can any of the family member contact me please? 00447969974125