யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
”உன் நினைவு மறையுமோ!!”
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எங்களின் உயிருக்குயிரானவனே
எங்களைப் பிரிந்து இரண்டு ஆண்டுகள் மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையா
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
எத்தனை கதைகள்.. எத்தனை வசனங்கள்..
எல்லாம் நான் கேட்டும்- என்னுயிரே!
உமது ஆத்மா என்னோடு இணை நின்று
என்னை இயக்கிச் செல்வதால் தான்
உமது பிள்ளைகள் உமது விருப்பப்படி
தனியாக நான் வளர்த்து
தலை நிமிர்ந்து நிற்கின்றேன்...
இரவென்றும் பகலென்றும் சுழன்று நான் ஓடுகையில்
இணையாக என்னோடு நீர் நின்று இயக்குவதை
என் மனம் மட்டும் தான் உணர்ந்து இளைப்பாறும்
நித்தம் என்னோடு உன் ஆத்மா உரையாடுவதால்
நிமிர்ந்து நான் நின்று உன் பணியாற்றுகின்றேன்
உள்ளமோ ஊமையாய் செவிகளோ செவிடாய்
உறவுள் உபாதையை உதறிவிட்டு நிற்கின்றேன்
அருமை முடிவென்று நீர் அரவணைத்துக் கொண்டதனை
அழும் எந்தன் நெஞ்சு மட்டுமே அறிந்து கொள்ளும்
உமது பிள்ளைகள் பற்றிய உன்னதக் கனவதனை
உணர்ந்து நான் நிறைவேற்றி வைப்பதனை கண்டு
உன் ஆத்மா ஆனந்தம் கொண்டதுவோ
அதனாலே பரவசமாய் மகளுக்கு ஆசி வழங்கி நின்றீரோ!
ஆண்டுகள் இரண்டு அகன்று போனாலும் எங்கள் உயிரே!
ஆத்மா விடைபெற்ற அந்த நாளை நாங்கள்
உம்பணி செய்து பணிந்து நிற்போம்
உள்ளம் உருகி வணங்கி நிற்போம்
தமிழ் மாதத்தின் மாசிப் பௌர்ணமியின்
பின்பு வருகின்ற துவாதசி திதியினிலே
உன் மகன் உமக்கு உரிமைக்கடன் செய்வான்
என் உயிர் உள்ளவரை
உமது ஆத்மக்கடனை
உரிமையுள்ள உமது மகன்
உணர்ந்து கடமை செய்து முடிப்பான்
என்றும் எம்மோடு உமது ஆத்மா துணைநின்று
எங்களை வழிநடத்த வேண்டி நிற்கின்றோம்
அன்னாரின் திதிக்கிரியை 02-03-2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIP I think I met you at the Highgate temple once. Can't believe it. Can any of the family member contact me please? 00447969974125