Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 SEP 1973
இறப்பு 23 FEB 2017
அமரர் ஞானசேகரம் ரதீஸ்வரன்
வயது 43
அமரர் ஞானசேகரம் ரதீஸ்வரன் 1973 - 2017 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டுகள்...!
பிரிவு என்ற வலியை நாம் சுமந்து நின்று..
மூன்று ஆண்டுகள் முடிந்தோடி விட்டதையா!
மனம், புலம்பிப் புலம்பி நொந்து நிற்க
பிள்ளைகள் நலனுக்காய் வாழ்ந்து வருகின்றேன்
நீர்செய்யும் பணி அனைத்தும்..
நான் தன்னந்தனியாக சுமந்து நிற்கின்றேன்
தாங்காத சுமையதனை தந்து போய்விட்டீரே..!

நீங்காது எம் மனதில் நிலைத்து நீர் நின்று- என்னை
நிமிர்ந்து பணி செய்ய இயக்கி நிற்கின்றீர்
எமது மகளின் விருதுவிழாவதனை செய்த வேளையிலே..
எல்லோரும் ஒன்றாய் கூடி நிற்கையில்-  எமது மகன்
எங்கள் அப்பா எங்கே? என்று அழுது..அடம்பிடித்து..
என்னை வதைத்து எடுத்து விட்டான்

கண்ணீர் கோலத்தில் நாங்கள் நால்வரும்..
கலங்கி நின்றோம்! நிச்சயம்
கலங்கி நீரும் தவித்திருப்பீர்
என்றும் எங்களோடு ஒன்றாகி நீர் நின்று
எங்களை வழிநடத்த வேண்டுமையா!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்