Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 29 JUN 1949
மறைவு 05 DEC 2022
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம்
வயது 73
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம் 1949 - 2022 மாத்தளை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் இராமலிங்கம்  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உங்களை நாம் இழந்த துயரை
ஈடுசெய்ய இயலாமல் தவிக்கின்றோம்!
எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய் பாசத்தின்
பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!

எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
வசந்தகாலம் என்றால் அது உங்களுடன்
வாழ்ந்த காலம் தானே! வாழ்க்கை என்பது
இறைவன் அவன் வகுத்தவரை தானே!
நாட்கள் 31 ஆனாலும் ஆறவில்லை எம் மனம்
உங்கள் அன்பு முகம், பண்பு,
பரிவு, பாசம் மாறாதே!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே வானில்
விண்மீனாய் இருந்து எம்
வாழ்வை வளப்படுத்துவீரே!  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிரியை கிருத்தியை 04-01-2022 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி ஞாயிற்றுக்கிழமை 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை மதிய உணவு நிகழ்வு நடைபெறும் உங்கள் அனைவரையும் மதிய உணவில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Thank You Message

As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during this time.

31st Remembrance Will be held on 08th January 2023 sunday.

Place : Salle (Eglise du Saint-Esprit) Rue de Saintonge 31100 Toulouse

மதிய போசனம் இடம்பெறும் இடம்: Metro : Bagatelle /bus 13

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அப்பன் - மகன்
கவி - மகள்
தாயா - மருமகன்
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்