1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசேகரம் இராமலிங்கம்
வயது 73
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் இராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:25/11/2023.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள்
முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்