Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUL 1937
இறப்பு 25 APR 2025
அமரர் ஞானானந்தன் பாக்கியலட்சுமி
வயது 87
அமரர் ஞானானந்தன் பாக்கியலட்சுமி 1937 - 2025 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சலையாவத்தை வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானானந்தன் பாக்கியலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!

என்ன நடந்தது ஏது நடந்தது என்று கணக்கிட்ட
நாட்கள் அதற்குள் ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும் 
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…

நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: கரன், மோகன் குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்