5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா
(சிறீ)
வயது 59
அமரர் கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா
1960 -
2019
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசபிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த குஞ்சு
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
குஞ்சு, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
என்னிடமே வந்திடுங்கள்!
ஐந்தாண்டு மட்டுமல்ல உயிருள்ள வரை
நான் என்றும் மறவேன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் என்னோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருகிறேன்....
தகவல்:
மனைவி