திதி:11/12/2024
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசமணி செல்வராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உனைப் பிரிந்து இன்றோடு ஆண்டுகள்
ஐந்து ஆகிவிட்டது ஆனாலும் உன் முகம் மறக்க
ஒருபோதும் எம்மால் முடியவில்லை
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ..!
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்
நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
கணவர்,பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!
எம் பாசத்திற்குரிய கணேசமணிக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வரும் கடும் துயரங்களுக்குப் பழக்கப்படடவர்களாவதே விதி....