திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மூதூர், திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா(மணி டீச்சர், ஓய்வுபெற்ற அதிபர், சுங்கான்குழி, ஆலங்கேணி) அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையருள் அழைத்திட மெய்யுடல் குரல் கொடுத்தது.
அடிபதித்த இல்லம் முடிவில்லா வாழ்வாம்
அடியொற்றி வாரா அழகுநகர் சென்றாய்
பிடித்த செபமாலை நற்கை உருள
விடிவெள்ளி யானாய்வா னில்.
இறைவழியில் இல்லறம் இன்பமான வாழ்வில்
நிறைகனி ஈந்தாய் நினைத்தால் பெருமை
பெயர்சொல்லப் பேரருடன் பேத்தி நுகர்ந்து
துயரற்றுத் துலங்கினா யே.
மல்லிகை பூத்து மணம்பரப்பும் வேளையில்
இல்லத்து வாசனை இல்லாமற் போனதென்ன?
வீட்டின் ஒளிராம் விளக்கு எரிகிறதே
வீட்டரசி இல்லாமல் இங்கு.
அன்னையே!
நித்திய வாழ்வில் இவைனின் பேரின்ப இல்லத்தில் வாழ்ந்திடும்
உம்மோடு.. ..
உந்தன் கணவரும் வயிற்றுக் கனிகளும், மருமக்கள், பேரன் பேத்தியரும் உடன்
பிறப்புக்களும் உறவினரும் நண்பர்களும் கண்ணீரில் தீபமேற்றிச்
செபமாலைப் பூக்களைச் சொரிந்து ஆராதிக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details