Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1945
இறப்பு 29 MAY 2023
திருமதி புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா (மணி டீச்சர்)
ஓய்வுபெற்றஅதிபர் சுங்கான் குழி ஆலங்கேணி
வயது 77
திருமதி புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா 1945 - 2023 மூதூர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மூதூர், திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா(மணி டீச்சர்,  ஓய்வுபெற்ற அதிபர், சுங்கான்குழி, ஆலங்கேணி) அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சவரிமுத்துகுருஸ், அடைக்கலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணை ஆராவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகராஜா(திருகோணமலை ப.நோ.கூட்டுறவு சங்கம் கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி சுவர்ணலதா, பிரேமலா, ஸ்ரீக்காந்(மதுவரித்திணைக்களம், அம்பறை), புஸ்பலா, கசில்டா கிறிசாந்தலா, லிண்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோண் தேவசகாயம், பேனாட், சுதர்சினி(மேலதிக அரசாங்க அதிபர்- மட்டக்களப்பு), ரொபட், கேதீஸ்வரன், பார்த்தீபன்சர்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆஸ்லின், தினேஸ், அபினேஸ், எமிலியா, கத்தலின், அவிசன், மெர்லின், அனிசா, கிறித்திக், நிதிஸ், அனஸ்ரின், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகேஸ்வரி, கோகிலம், அருட்சகோதரி சுகிர்தா குருஸ், காலஞ்சென்ற பரமநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலேந்திரன், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற நாகராசா, சித்திரவேல், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, சந்திரா, காந்தி, அசோக்குமார் நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இலச்சுமி, இராசகோன், தங்கேஸ்வரராஜா மற்றும் இராமநாதன், விஜயலச்சுமி, மங்கையற்கரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஜோண் குரூஸ் ரெஜீனா குரூஸ் தம்பதிகளின் பெறாமகளும் ஆவார்.

Live link1: Click Here
Live link2: Click Here

அன்னாரின் நல்லடக்கத்திற்கு பிறகு ஒரு சிறு செபத்துடன் உணவு பரிமாறப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மேரிசுவர்ணா - மகள்
பிரேமி - மகள்
ஸ்ரீக்காந் - மகன்
புஸ்பலா - மகள்
கசில்டா - மகள்
லிண்டா - மகள்
கோகிலம் - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 28 Jun, 2023