Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 AUG 1945
இறப்பு 29 MAY 2023
அமரர் புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா (மணி டீச்சர்)
ஓய்வுபெற்றஅதிபர் சுங்கான் குழி ஆலங்கேணி
வயது 77
அமரர் புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா 1945 - 2023 மூதூர், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மூதூர், திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா(மணி டீச்சர், ஓய்வுபெற்ற அதிபர், சுங்கான்குழி, ஆலங்கேணி) அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி.

என்னவளே என் இனியவளே!
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உம் நினைவுகள்
 ஒரு போதும் என்னை விட்டு அகலாது!

ஆண்டு ஒன்று ஆன போதிலும்
 நீங்களில்லா துயரம்
 இன்னும் ஆறவில்லை அம்மா!!
 எம்மை படைத்த எங்கள் குலதெய்வமே
 பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு.
அன்பு பெருக அணைத்த கரங்களும்,
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்,
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
 ஒரு வருடம் உருண்ட போதிலும்
 உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
 ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
 உங்களின் ஞாபகம் அம்மா! மீண்டும்
வரமாட்டாயா என ஏங்குதம்மா உன் உயிர்கள்!

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
எங்களுடன் பிறந்தவளே எம் அருமைச் சகோதரியே!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எங்களுக்கு சகோதரியாய் பிறந்திடவே
ஏங்குதம்மா எம் இதயங்கள்!!

உங்களின் மீதான எங்களின் தேடல்
 எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!  

இறையன்பில் ஒளிபெறும் புளோரன்ஸ் கிறிஸ்ரின் அவர்களின் முதல்வருட நினைவேந்தல்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 07 Jun, 2023
நன்றி நவிலல் Wed, 28 Jun, 2023