4ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
1983 -
2019
உடுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் பல கடந்திடினும்
வருந்தி நாம் அழுகின்றோம்
விழிமூடித் தூங்கி விட்டு
விழிக்காமல் போனதென்ன?
விண்ணுலகைப் பார்ப்பதற்கு
விரைந்தோடிப் போனதனால்
விட்டுச்சென்ற உறவனைத்தும்
விழி நீரால் தவிக்கிறதே...
அன்பான புன்னகையால் அனைவரையும்
கவர்ந்த முகம் அனுதினமும் நினைவில்
வந்து அசைவாடி நிற்கிறதே....
நிலையில்லா இவ்வுலகை நீர்
உணர்த்திச் சென்று விட்டீர்...
நிலையான இறைவனுடன்
நிலைத்திருக்க வேண்டுகின்றோம்....
எத்தனை வருடங்களானாலும்
உங்கள் அன்பான முகமும்
அழியாத நினைவுகளும்
எம் உள்ளங்களில்
என்றும் நிலைத்திருக்கும்...
தகவல்:
குடும்பத்தினர்