Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 20 NOV 1983
உதிர்வு 01 SEP 2019
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
வயது 35
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் 1983 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டிரண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்

எத்தனை ஆசைகள்! எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியிற்குள் நொருங்கிப் போனதே
இது தான் வாழ்க்கையென எழுதிவைத்த இறைவனின்
தத்துவங்கள் புரிந்தும் தவிக்கின்றதே எங்கள் உள்ளம்!

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos