யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எமில்டா ஜெயசீலன் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் செல்வம், மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிரான்ஸிஸ்,பிலோமினா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஜெயசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
அனோஜெயன் அவர்களின் அருமைத் தாயாரும்,
எமில்ஜோன், எமில்டன்(கனடா), எரிக், ஏனஸ்ற்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,
சுமங்கலா, திலகா, றேணுகா, பத்தினாதர், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஸ்கந்தா, ஜெருசா, ஜெருசன், கெனத், நிறாஜ், நொய்லின், பேளி, மனோஜ், டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
West Berlin மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பை 08-02-2021 திங்கட்கிழமை நிகழ்வுகளின் நேரடி ஓளிபரப்பின் போது உபயோகிக்கவும்.