

பூரண சந்திரன் போன்ற புகழ் நிறைந்த மனிதன் சந்திரசேகரம் ஐயா சாதனை மனிதன் சரித்திரம் பேசும் படைப்பு. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து சமூக சேவையால் இணைந்தோம். பொன்னான அந்த நாட்களை பொக்கிஷமாக சேமித்து வைப்போம் சாகா வரம் கேட்கவில்லை காலம் தாழ்த்தி கூட்டி போயிருக்கலாம் என்ற ஏக்கம் தான். பிறந்த உயிர்கள் இறக்கும் விதி தெரியும் விந்தை மனிதர்களை விரைவில் எடுப்பது ஏனோ என்ற கோபம் இறைவனையே பார்த்து கேட்கிறேன். இதய அறை உடைவது போல் உணர்கிறேன் உங்கள் இழப்பு செய்தி கேட்டு, என் கவிதைகள் பற்றி பேசுவோரில் நீங்களும் ஒருவர் என்று உணர்ந்தேன் ஆழமான உங்கள் வாழ்த்துக்கள் ஊடாக, நல்லிணக்க கவிதை ஒன்று பார்த்து வியர்ந்து பேசீனிர்கள். சகிப்புத்தன்மை, பொறுமை உங்கள் உடைமை என்றீர்கள். கவிதைகளை உங்களுக்கும் அனுப்ப சொன்னீர்கள் அனுப்ப நினைத்தேன். ஆனால் உங்களுக்காகவே அதுவும் இறுதியாக ஒரு கவிதை எழுதுவேன் என நினைத்து பார்க்கவே இல்லை. நீங்கள் இல்லாத சபைகளை நினைத்து பார்க்கவே முடியவில்லை கண்ணீரால் கண்கள் குளமாகின்றன. மத்தியஸ்த சபை தலைவராக, நல்லிணக்க சபை உறுப்பினராக, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினராக, சமூக செயற்பாட்டாளராக, சமாதான செயற்பாட்டாளராக பல பரிமாணங்களில் பயணித்த மனிதன். அதற்கு மேலாக கனிவான மா மனிதன் கடமைகளை சரியாக செய்யும் காரியதரிசி மரியாதை மிகுந்த மனிதன் ஓடி வந்து உதவும் உயர்ந்த உள்ளம் கண்டு வியந்து பேசியதுண்டு. இறையடி சேர்ந்த செய்தி கேட்டு கலங்கி நிற்கின்றோம் கண் முன் கண்ட காட்சிகள் மதி மயங்கச் செய்கின்றது மகள் என்றால் இன்னும் ஒரு முறை அழைப்பீர்களா? என நினைத்ததுண்டு. கண் கலங்கி நிற்கின்றோம் கதிகலங்கி நிற்கின்றோம் ஏன் இந்த தீர்ப்பு இறைவா? சமூகத்திற்காக பாடுபட்டது போதும் என்று ஓய்வு கொடுக்க நினைத்தாயோ? அலுவலகம் வந்தாலும் எப்படி மகள்? என்ற அந்தக் குரல் இனி என் காதில் வந்திடாதே என்னை கண்டதும் நலம் விசாரித்து நன்மை தீமைகள் பேசுவீர்கள் நல்ல மனிதன் என்று நினைத்து விடை பெறுவேன். விதி விலக்கான விந்தை மனிதர்கள் விண் நோக்கி விரைந்து சென்றால் விதி என நினைப்பதை தவிர ஏழை எம்மால் என்ன செய்ய முடியும். இறுதி ஊர்வலம் இரங்கல் உரை இவ்வளவு தான் வாழ்க்கை மகளின் திருமணத்திற்கு மகிழ்வோடு வந்து கலந்தோம் உங்கள் இறுதி நிகழ்வை எப்படி பார்க்கப் போகிறோம் இறைவா என் மனதையும் கல்லாக்கிவிடு
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences.