அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், அம்மன் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பூரணசந்திரன் போன்ற புகழ் நிறைந்த மாமனிதன் சந்திரசேகரம் ஐயா, சாதனை மனிதன், சரித்திரம் பேசும்படைப்பு. கல்முனை மத்தியஸ்தசபை தலைவராக, YMCA தலைவராக, நல்லிணக்கசபை உறுப்பினராக, வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினராக, சிகரம் பெரிய நீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றிய தலைவராக, PAFFREL உறுப்பினராக, சமூக செயற்பாட்டாளராக, அகில இலங்கை சமாதான நீதவானாக, மற்றும் பலபரிமாணங்களில் பயணித்த பெருமைமிகு தொண்டன்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், இரங்கல் உரைகள் வழங்கியவர்களுக்கும், நல்லடக்க பிரார்த்தனை நடத்திய மெதடிஸ்த திருச்சபையினருக்கும், YMCAயில் அஞ்சலி செய்ய ஏட்பாடுகள் செய்து அவரின் திருவுடலை சுமந்து நல்லடக்கம் செய்ய உதவிய YMCA, சிகரம் மற்றும் ஏனைய நிறுவனங்களை சேர்ந்த இனிய உள்ளம் கொண்ட இளைஞர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம்நாள் நினைவஞ்சலி 15-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணிமுதல் எமது இல்லம் 95 அம்மன் கோவில் வீதி, கல்முனையில் நடைபெறும். இந்த வேளையில் நடைபெறும் ஆத்ம சாந்திக்கான ஆராதனையிலும் அதனை தொடர்ந்து மதியபோசன ஐக்கிய உணவிலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.