
ஜெர்மனி Hildesheim ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈழவன் பிரபாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈழவனே எங்கள் இனிய செல்வமே !
நம் வம்சத்து வாரிசாய் வந்த குலவிளக்கே
அன்பு பண்பு அறிவு அழகு கல்வித்திறனோடு
கால்பந்து விளையாட்டு வீரனாய் திகழ்ந்தாய் !
ஜேர்மன் கால்பந்துகழகங்கள் தமக்காய் ஆக்க
போட்டி போட்டு உனை தெரிவு செய்தனரே
ஜேர்மனிக்கு மட்டுமல்ல எம்தமிழ் இனத்துக்குமாக
புகழீட்டி தரவந்த வீரன் நீயன்றோ
பொல்லா விதிவந்து பொறுக்காது பறித்ததுவே
அன்றாடம் உன்னை அரவணைத்த அன்பு அம்மா !
நீ விடைபெற்றும் விடை தேடி துடிக்கின்றார்!
சான்றோனாய் உருவாக்கிய உன் செல்ல அப்பா
செல்வமே சென்றதென்று தவிக்கின்றார்!
ஓடி ஆடி உன்னோடு விளையாடிய உன் தம்பி
நீ வரமாட்டாய என ஏங்குகிறான்!
பாசமிகு எமக்கெல்லாம் பகலவனாய் இருந்தவனை
காத்திருந்த பறித்த காலன் கொடியவனே
நேற்றுப்போல் இருக்குதய்யா
நீ பிரிந்து ஓராண்டு!
நாங்கள் மறப்போமா?
மறவோமே எம் ஈழவனை!
கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணில் துளியானாய்
உன் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள்.
Om Shanthy Om Shanthy!!!