”நீரே என் புகலிடம் உமது இறக்கைகளின்
பாதுகாப்பில் நான் தஞ்சம் புகுந்துள்ளேன்”
யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பு எட்மன் வில்பிறற் ராஜா அவர்களின் நித்திய பேரின்பமடந்த நினைவுநாள் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்திகேட்டு, எமது வீட்டிற்கு வந்து ஆறுதல் அளித்தும், இறுதிவீடு, திருப்பலிப்பூசை, சேமக்காலை ஆகிய இடங்களில் நடைபெற்ற சகல நினைவுகளிலும், ஒன்றுகூடி எமது துயரினைத்துடைத்து, ஆறுதலளித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், அனுதாபம் தெரிவித்த நல் உள்ளங்களுக்கும், மலர் வளையங்கள், மலர்மாலைகள் சார்த்திய அனைவருக்கும், அதிவிசேடமாக அவரது இறுதுச்சடங்குகளின் எல்லா நிகழ்வுகளிலும், பங்குபெற்று இறையாசியை அருளிய அருட்தந்தை Rev Father சுரேஸ், அருட்தந்தை Rev Father பிரான்சிஸ் அவர்கட்கும், திருப்பலி நிறைவேற்றிய அருட்தந்தை Rev Father Mariosalvasdor அவர்களுக்கும், இதுவரை எங்களுக்குச் சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
”எல்லாவரமும் நிரம்பி வழியும் தூய நல் ஆவியே
எட்மனது ஆன்மாவை உம்மிடம் அழைத்தநாளும்”
Our heartfelt condolences.