Clicky

தோற்றம் 25 OCT 1980
மறைவு 24 MAR 2021
அமரர் ஈஸ்வரன் இளங்கோ
வயது 40
அமரர் ஈஸ்வரன் இளங்கோ 1980 - 2021 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Eashwaran Elango
1980 - 2021

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் வார்த்தை தடுமாறுகின்றதே நேற்றுக் கண்ட உனை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உனை காலனுனை கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? – நாமோ!! இன்று மங்காத உன் நினைவால் மயங்கியே நிற்கின்றோம். அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. 5. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பானவனே உன் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உன் உயிரை உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே மண் விட்டு வானம் சென்றீரோ? வானம் சென்ற உமை நினைத்து கண்ணீர் விட்டு கரைகிறோம் ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை . இப்படிக்கு மைத்துனர்.. துவாரகன் uk

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Mar, 2021
நன்றி நவிலல் Thu, 22 Apr, 2021