
கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈஸ்வரன் இளங்கோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எங்கள் இதயம்
உன் இனிய புன்னகையை
மீண்டும்
ஒருமுறை காண்போமா...
வாழ்க்கை என்ற வசந்த
காலம் வரும்போதே- உன்னை
வாரி அணைத்துக் கொண்டானே
அந்த இறைவன்
வலி தாங்க முடியாமல் நாங்கள்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
ஒரு நாளும் மாறாது - எம் சொந்தம்
எங்கள் உயிரோடு உயிர்
சேர்ந்தது
உன் - பந்தம்
ஆண்டு ஒன்று
சென்றாலும் - எம்
மனங்களில்
நிறைந்திருக்கிறாய்
இறப்பது வாழ்வில் இயற்கையின் நியதி
இளவயதில் நீ பிரிந்ததுதான் - எங்கள்
இதயத்தை
வாட்டுது
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
இன்றும் நீ எம்மோடு
வாழ்ந்து
கொண்டே இருக்கின்றாய்
என்றும் நீங்காத சோகம் எம்
நெஞ்சங்களோடு
ஈரவிழிகளுடன்
உம் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details