

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமைக் கணவரே!
என்னையும் என் பிள்ளையையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
ஆண்டு மூன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும்
கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா
உலகமே நீங்களென உறுதியாய்
நாமிருக்க
மனைவி பிள்ளைகளை இப்படி
தவிக்க விட்டு
ஏனப்பா விண்ணுலகம் சென்றீர்கள்
உங்கள் பிரிவை நம்பமுடியாது
தவிக்கிறோமே நாங்கள்
உங்கள் நகைச்சுவைப் பேச்சும்
சிரித்த முகமும்
உபசரிக்கும் பண்பும் உதவி செய்யும் குணமும்
அன்பான மனமும் மறக்கமுடியாது
தவிக்கிறோமே நாம்
எத்தனை உறவுகள் என்
அருகில் இறுந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல
என் உயிர் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..