

-
07 JAN 1941 - 13 SEP 2022 (81 வயது)
-
பிறந்த இடம் : தெல்லிப்பழை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka London, United Kingdom
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02/09/2023.
என் அருமைக் கணவரே!
என்னையும் என் பிள்ளையையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்..
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி
மறைந்தாலும் அகலாது உங்கள்
அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள்
அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ! இன்று
பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும் எம்
உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் எங்கள்
நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தெல்லிப்பழை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
